ரூ.11½ லட்சத்தில் நூலகங்கள் சீரமைக்கும் பணி

கெலமங்கலம் ஒன்றியத்தில் ரூ.11½ லட்சத்தில் நூலகங்கள் சீரமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-02-04 18:45 GMT

ராயக்கோட்டை

கெலமங்கலம் ஒன்றியத்தில் பழுதடைந்த நூலகங்களை சீரமைக்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022- 23-ன் கீழ் ரூ.11 லட்சத்து 53 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து முகளூர், முத்தம்பட்டி, பைரமங்கலம், கொம்மேப்பள்ளி, கெத்தள்ளி, அனுசோனை, ஒசட்டி, தடிக்கல், கோட்டை உளிமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள 9 நூலகங்களை சீரமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவி கலைச்செல்வி ராஜேந்திரன், துணைத்தலைவர் உக்கரப்பா, வட்டார காங்கிரஸ் தலைவர் சுந்தர்ராஜ், ஊர்கவுண்டர் விஜியன், விவசாய சங்க பிரதிநிதி முனுசாமி, ஒப்பந்ததாரர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்