விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி நடத்தினர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் வகையில் திருச்செந்தூரில் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு பேரணி நடந்தது. மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜான்வளவன் வரவேற்றார். பின்னர் டாக்டர் அம்பேத்கர் உருவாக்கித் தந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தனிச்சிறப்புடைய ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றை பாதுகாத்திட சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பூமயில் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி, திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் இருந்து தொடங்கி காமராஜர் சாலை, பகத்சிங் பஸ்நிலையம் வழியாக வழியாக சென்று யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள திடலில் நிறைவு பெற்றது.
பேரணியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், சமூக நீதி பேரவை பொது செயலாளர் அகமது சாஹிப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் தமிழினியன், முற்போக்கு மாணவர் கழகம் மாநில துணை செயலாளர் தர்மராஜ், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ் குட்டி, தொண்டரணி மாநில துணை செயலாளர் சுதாகர், சமூக நல்லிணக்க பேரவை மாநில துணை செயலாளர் நாராயணன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கதமிழன், சிவகுரு, செல்வகுமார், சங்கர், செந்தில்குமார், தமிழ்வாணன், நகர செயலாளர்கள் உதயா, தவுபிக் அன்சாரி, வாசு, வெள்ளத்துரை, துரை, அய்யப்பன், முத்துக்குமார், மாணிக்கம், பாஸ்கரதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட மேலிட பொறுப்பாளருமான கலைவேந்தன் நன்றி கூறினார்.