பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது;
மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் துறை மூலம் நாளைய டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது. சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடிதம் எழுதி தமிழ்நாடு அஞ்சல் முதல் நிலை பொது மேலாளர், முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைத்தனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் ஆசிரியர்கள், தெ.புதுக்கோட்டை அஞ்சல் நிலைய அஞ்சல் தலைவர் தீனதயாளன் ஆகியோர் செய்து இருந்தனர்.