முதல்-அமைச்சர், நீதிபதிக்கு கடிதம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் முதல்-அமைச்சர், நீதிபதிக்கு கடிதம் அனுப்பினர்

Update: 2023-04-22 15:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதிபதி பாரதிதாசன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமையிலும், மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலையிலும் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் கடிதம் அனுப்பினர்.

முன்னதாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து காந்தி சிலை அருகே உள்ள தபால் அலுவலகம் வரை கட்சியினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல், மாவட்ட அமைப்புச் செயலாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் லோகநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் கோகுல், நகராட்சி உறுப்பினர்கள் சாரதி, கோமளா ஏழுமலை, நகர செயலாளர் ஏழுமலை, நகர தலைவர் ஜெயசீலன், நகர துணைச் செயலாளர் ராமு, ஒன்றிய கவுன்சிலர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்