வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
கடுவங்குடி ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.;
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா சின்னத்துரை, அரசு டாக்டர் கவுசிகா ஆகியோர் முன்னிலை வகித்தார்.. சுகாதார அலுவலர் கருணாகரன் வரவேற்றார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு ரூ.2,000 மதிப்புள்ள உணவு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார். முகாமில் 1,065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். வட்டார அளவில் அங்கன்வாடிகள் சார்பில் இயற்கை உணவு மற்றும் இயற்கை வகையான ஊட்டச்சத்து பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதில் கிராம செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.