'பெண் குழந்தைகளை காப்போம்' விழிப்புணர்வு ஊர்வலம்

பெரணமல்லூரில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-12-05 18:02 GMT

சேத்துப்பட்டு

பெரணமல்லூரில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் 'பெண் குழந்தைகளை காப்போம்' விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது, ஊர்வலத்திற்கு பெற்றோர் கழக தலைவரும் பேரூராட்சி தலைவருமான வேணி ஏழுமலை தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார்,

ஊர்வலத்தை ஒன்றியக் குழு தலைவர் இந்திரா இளங்கோவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார், பெண் குழந்தைகளை காப்போம், குழந்தை் திருமணத்தை தடுப்போம், பாலியல் குற்றங்கள் நடைபெறமால் பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம் ாபான்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்ற மாணவிகள் துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர். ஊர்வலத்தில் உதவி தலைமை ஆசிரியர் லதா, தற்காலிக ஆசிரியை ஆர்த்தி, சமூகப் பணி அலுவலர் சீனிவாசன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார மேற்பார்வையாளர் முத்துழகி, 'சைல்டுலைன்', களப்பணியாளர் பாலாஜி, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர் கழகப் பொருளாளர் கணபதி நன்றி கூறினார்,

Tags:    

மேலும் செய்திகள்