'ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்': கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி அளித்தார்
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடசென்னை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்பட தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அ.ம.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாநில அமைப்பு செயலாளர் ஸ்டார் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு விஜயலட்சுமியின் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், நடந்த எல்லா விஷயங்களையும் மறந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அனைவரும் ஒன்று சேரலாம் என்று தெரிவித்தார்.
ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். எடப்பாடி பழனிசாமி வரவில்லை என்றால் பரவாயில்லை, மற்றவர்கள் வருவார்கள். மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அமைப்போம். கே.பி.முனுசாமி துரோகம் செய்தவர். கட்சி அழிவு பாதைக்கு செல்வதற்கு அவர்தான் முக்கிய காரணம் என்றார்.