சிறுத்தை நடமாட்டம்: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் இன்று சிறுத்தை புகுந்தது. பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து மாணவர்களை வனத்துறையினரால் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் . மேலும் சிறுத்தையை தேடும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை புகுந்த இந்த தனியார் பள்ளி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து, திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தர்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.