காரமடை அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தை-பொதுமக்கள் பீதி

காரமடை அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2022-09-08 14:38 GMT

காரமடை

காரமடை அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

சிறுத்தை

கோவை மாவட்டம் காரமடை அருகே முத்துக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 60) விவசாயி. இவர் அப்பகுதியில் விவசாயம் செய்தும், தோட்டத்தில் மாடுகள் வளர்த்தும் வருகிறார்.தோட்டத்தில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவர் தோட்டத்திற்கு செல்லும் போது மாடுகள் சத்தமிட்டுள்ளன. அங்கு சென்று பார்க்கும்போது சிறுத்தை ஒன்று கன்று குட்டியை அடித்து கொன்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்து கால்தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தைதான் கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

பொதுமக்கள் பீதி

இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் வனத்துறையினர் எடுக்கவில்லை. மேலும் கடந்த 3 மாதத்தில் ஆடு, மாடு வளர்ப்பு நாய்களை சிறுத்தை தாக்கி கொன்றது. மனித உயிரிழப்பு ஏற்படும் முன்பு சிறுத்தையை பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து வனத்துனையினர் கூறுகையில், இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து உடனடியாக அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்