முயலை வேட்டையாடும் சிறுத்தை

முயலை வேட்டையாடும் சிறுத்தை காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.;

Update: 2022-12-07 18:45 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் திருப்பதியாபுரம், செட்டிமேடு, வேம்பையாபுரம், அனவன் குடியிருப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் சிறுத்தை, கரடி, மிளா, யானை, காட்டு பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது உண்டு. மேலும் சிறுத்தையானது வளர்ப்பு பிராணிகளான நாய், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வீட்டு விலங்குகளையும் வேட்டையாடிச் செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மலையடிவாரப் பகுதியில் சிறுத்தை ஒன்று, முயலை வேட்டையாட துரத்திச் சென்றுள்ளது. இதை அப்பகுதியில் நின்ற இளைஞர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்