ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2023-07-18 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரரை மதிப்பீட்டு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுவிடுதி வசதி, சாப்பாட்டின் தரம் குறித்து குழுவினர் மாணவ, மாணவியரிடம் குறைகள் கேட்டனர்.

சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். இக்குழுவினரை முத்துகருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், பள்ளித் தலைமை ஆசிரியருமான பாலமுருகன் கருப்பசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தயார் செய்யும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சமையல் அறையில் மதிய உணவை சாப்பிட்டு பார்த்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் சாப்பாடு தயார் செய்யும் விதம் குறித்து கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் உள்ள கழிவறை உணவு அருந்தும் அறை ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் மாணவ, மாணவியரிடம் குழுவினர் குறைகள் கேட்டனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன் (வேடசந்தூர்), சந்திரன் (திருத்தணி), சிந்தனைசெல்வன் (காட்டுமன்னார்கோவில்), சிவக்குமார் (மயிலம்), சேவூர்ராமச்சந்திரன் (ஆரணி), நாகைமாலி (கீழ்வேளூர்), பரந்தாமன் (எழும்பூர்), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் நாணயம், முத்துகருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், பள்ளித் தலைமை ஆசிரியர்பாலமுருகன் கருப்பசாமி, சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவர் சரோஜா கருப்பசாமி, தாசில்தார் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்