செங்கோட்டையில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு

செங்கோட்டையில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு செய்தது.

Update: 2023-09-08 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சேவைகள் திருப்திகரமாக இருப்பதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து சுகாதார நிலையத்திற்கு தேவையான சேவைகள் குறித்து கேட்டிறிந்தனா். அதில் சுகாதார நிலையத்திற்கு 2 மருத்துவ அலுவலா் மற்றும் மருந்தாளுர் பணியிடங்களும், கூடுதல் நவீன ஆய்வக கட்டிம், மற்றும் மருந்தக கட்டிடம் உள்பட பல்வேறு கோரிக்கைள் வைக்கப்பட்டது.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை இயக்குனர் முரளி சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் தமிழ்செல்வி, மருத்துவ அலுவலா் மாரிச்செல்வி, சித்த மருத்துவ அலுவலா் தேவி, பல் மருத்துவ அலுவலா் இந்துமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளா் கதிரவன் மற்றும் சுகாதார நிலைய பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்