அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

முன்னீர்பள்ளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update: 2023-01-26 22:01 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் ஆகியவை சார்பில் முன்னீர்பள்ளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலச்சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி குமரேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். முத்திரை ஆய்வாளர் விஸ்வநாதன், மங்கள் வித்யா பவுண்டேஷன் நிறுவனர் ராகுல், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பாலசுப்பிரமணியன், அருள் முருகன், கோபால் ஆகியோர் விளக்கி பேசினார்கள். பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்