சட்ட விழிப்புணர்வு முகாம்

ஊத்தங்கரை அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-09-08 19:30 GMT

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப்பணிக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி (பொறுப்பு) தலைமை ஆசிரியர் சக்திவேல் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.அமர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜே.ஆர்.சி, நாட்டு நலப்பணித்திட்டம், பசுமை படை மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் நீதிபதி பேசுகையில், வழக்கறிஞர் படிப்பு படித்தால் நீதிபதி, வக்கீல் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் பணிபுரியலாம் என்றார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் வடிவேல், விஜி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி. ஆசிரியர் கணேசன் மற்றும் வட்ட சட்டப்பணிக்குழு சார்ந்த இனியன் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்