சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. இன்று விடுமுறை - தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-11-11 03:48 GMT

கடலூர்,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்