கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நாளை தொடங்குகிறது
கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.;
சென்னை,
அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அவ்வப்போது நடத்தப்படுகிறது. அதன்படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள் https://exam.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வுக்கு ஒருநாளைக்கு முன்பு பிற்பகல் 2 மணி முதல் அந்தந்த பள்ளிகள் பதிவிறக்கம் செய்து மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்வும் 25 கொள்குறி வகை வினாக்களை கொண்டதாக 40 நிமிடங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இந்த தேர்வை அந்தந்த வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.