பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
களக்காடு அருகே பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.;
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.செல்வகருணாநிதி கொடியேற்றி வைத்து மாணவ -மாணவிகளுக்கு கற்றல் உபகரண பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் கடம்போடுவாழ்வு பஞ்சாயத்து தலைவர் உச்சிமாகாளி, தலைமை ஆசிரியர் பாஸ்கர், ஆசிரியை லீனா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.