குற்றாலம் அருவிகளில் கசியும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-06-03 12:40 GMT


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. பின்னர் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் படிப்படியாக அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.

தற்போது குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடுமையான வெயில் அடித்தது வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து உள்ளது.

ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் மட்டும் குறைவாக தண்ணீர் விழுகிறது. மீதமுள்ள மூன்று கிளைகளில் தண்ணீர் கசிகிறது. மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் குறைவாக தண்ணீர் விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் பாறையை ஒட்டி கசிகிறது.

இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்கிறார்கள். இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் வந்தாலும் மகிழ்ச்சியாக குளிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்