ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி
காவனூர் இந்திரா நர்சரி பள்ளியில் ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி நடைபெற்றது.
ஆற்காடு தாலுகா திமிரி அடுத்த காவனூரில் செயல்பட்டு வரும் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமை தாங்கினார். பள்ளி கணக்காளர் கே.லட்சுமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் எம்.கோபி வரவேற்றார்.
ராணிப்பேட்டை வித்யா பாரதி மாவட்ட தலைவர் ஜா.அண்ணாமலை பயிற்சி வகுப்பை நடத்தினார். அப்போது ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் போது நீதி கதைகளையும், நல்ல பண்புள்ள கதைகளையும் கூறி பாடம் நடத்த வேண்டும். பெற்றோர்கள் உள்பட பெரியவர்களிடம் பிள்ளைகள் மரியாதையுடன் பழகவும், குழந்தைகளிடத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது, டி.வி. பார்க்கக் கூடாது என ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மற்றவர்கள் பொருட்களை எடுக்கக் கூடாது என்பன போன்ற நல்ல பண்புகளை மாணவர்களுக்கு இளமையிலேயே சொல்லித் தர வேண்டும் எனக்கூறினார். முடிவில் கணினி ஆசிரியர் எம்.சுரேஷ் நன்றி கூறினார்.