போலீசாரை கண்டித்து வக்கீல்கள் தர்ணா

தாம்பரம் கோர்ட்டு அருகே போலீசாரை கண்டித்து வக்கீல்கள் தர்ணா.

Update: 2022-11-29 23:43 GMT

தாம்பரம்,

தாம்பரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரியும் மூர்த்தி என்பவர் கடந்த 27-ந் தேதி இரவு குடும்பத்துடன் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு சிட்லப்பாக்கம் ராஜேந்திர பிரசாத் சாலையில் வந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிட்லபாக்கம் உதவி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் என்பவர் மூர்த்தியின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சேலையூர் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வக்கீல்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை கண்டித்து தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை புறக்கணித்து 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் மற்றும் தாம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சேலையூர் இன்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், வக்கீல்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்