வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம்

தென்காசியில் வக்கீல்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-30 18:45 GMT

ஆலங்குளத்தில் நேற்று முன்தினம் சொத்து தகராறு காரணமாக வக்கீல் அசோக்குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், முதல் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று காலை வக்கீல்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் செல்லத்துரை பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் அரசு வக்கீல் கார்த்திக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "மீண்டும் இதுபோன்று ஒரு சம்பவம் வக்கீல்களுக்கு ஏற்படக்கூடாது. பாராளுமன்றத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக வருகிற 9-ந் தேதி வரை கோர்ட்டுகளை புறக்கணிக்க உள்ளோம்" என்றனர்.

தகவல் அறிந்ததும் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்