கள்ளக்குறிச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-23 18:55 GMT

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணை தலைவரும், கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க செயலாளருமான சீனிவாசன் முன்னிலை வகித்தார். நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகிய சட்டங்களை மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்