மத்திய அரசால் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றி அமைத்து புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ள புதிய சட்ட வரையறைகளை கண்டித்து நேற்று நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.