டிராக்டர் டிப்பர் கதவு மோதி வக்கீல் பலி
உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் டிப்பர் கதவு மோதி வக்கீல் பலியானாா்.;
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் ஜெய்சங்கர்(வயது 30). வக்கீல். இவர் தனது நிலத்திற்கு டிராக்டர் டிப்பர் மூலமாக உரம் ஏற்றிச்சென்றார். நிலத்தில் உரத்தை கொட்டுவதற்காக டிப்பர் கதவை திறந்தபோது எதிர்பாராத விதமாக கதவு மோதியதில் ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் விரைந்து சென்று ஜெய்சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.