மோட்டார் சைக்கிள் விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலி

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.;

Update: 2022-06-19 14:27 GMT

தூத்துக்குடி வெற்றிவேல் புரத்தைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. இவருடைய மகன் அஜய் (வயது 21). இவரும், போல்டன் புரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் முகேஷ் கண்ணா (21) ஆகிய 2 பேரும் நெல்லை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு கல்லூரி முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை அஜய் ஓட்டி வந்தாராம். அவர்கள் வாகைகுளம் விமான நிலையம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக 2 பேரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முகேஷ்கண்ணா நேற்று பரிதாபமாக இறந்தார். அஜய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்