விருதுநகரில் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும்-வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
விருதுநகரில் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும்-வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
விருதுநகரில் அகில இந்திய வக்கீல் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் துணை தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் முத்து அமுத நாதன் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகரில் நடப்பு கல்வியாண்டே சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும். மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும். மேலும் விபத்தில் பலியான மற்றும் காயம் அடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சமீப காலங்களில் இறந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு உரிய சேமநலநிதி வழங்க பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வக்கீல்கள் கட்டணமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம் கனியாமுத்தூர்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொருளாளர் சிவகுமார், மாநில செயலாளர்கள் சாஜி செல்வன், பாண்டீஸ்வரி, மாவட்ட செயலாளர் சுப்புராம் உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.