தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - அண்ணாமலை

மெழுகுவர்த்தியை யார் கையில் எடுத்தாலும் அது மொத்தமாக எரிந்து கீழே வந்துவிடும். அதேபோலத்தான் திமுக அட்சி என்று அண்ணாமலை பேசினார்.

Update: 2023-02-21 13:16 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

இந்தியாவில் ஒரு ஈகோசிஸ்டம் உள்ளது. ஜே.என்.யூ ஈகோ சிஸ்டம், ஜந்தர் மந்தர் ஈகோ சிஸ்டம். எங்கேயாவது அரியானாவில் ஒரு நாய் செத்துப் போயிருக்கும். பிஜேபி ஆட்சியில் இருக்கும். உடனே கனிமொழி மெழுகுவர்த்தியுடன் வருவார்கள். உத்தர பிரதேசத்தில் ஒரு குரங்கிற்கு வயிறு சரி இல்லாமல் போயிருக்கும். அந்த குரங்கிற்கு வயிறு சரியில்லாமல் போனதற்கு யோகி ஆதித்யநாத் தான் காரணம் என்று மெழுகுவர்த்தியை தூக்கிக் கொண்டு குறுக்கவும் மறுக்கவும் ஓடுவார்கள்.

இன்றைக்கு அந்த கும்பல் எங்கே சென்றது. மெழுகுவர்த்தியை யார் கையில் எடுத்தாலும் அது மொத்தமாக எரிந்து கீழே வந்துவிடும். அதேபோலத்தான் உங்க (திமுக) ஆட்சி. மெழுகுவர்த்தி போல உங்க ஆட்சி எரிந்து கொண்டு இருக்கிறது. அது உங்களை உணர்த்துவதற்காகத்தான். மெழுகுவர்த்தி எப்படி எரிந்து உருக்குலைந்துபோகிறதோ அதேபோல்தான் உங்கள் ஆட்சியும்" என்றார். 

மேலும் செய்திகள்