தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் ரகுபதி

வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2024-07-29 06:51 GMT

சென்னை,

சென்னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பழிவாங்கும் போக்கிலான முன்விரோத கொலைகள்தான் அதிகரித்து இருக்கிறது. புதுப்புது குற்றவாளிகள் உருவாகிறார்கள்; என்ன செய்வது?. பழிக்குப் பழியாக நடக்கின்ற கொலைகளுக்கு அரசு ஒன்றும் செய்ய முடியாது; ஆனால் தடுக்க முயற்சிக்கிறோம். புதுச்சேரியில் நிகழ்ந்த படுகொலையையும், தமிழ்நாட்டில் நடந்ததாக குற்றம் சாட்டுகிறார்கள்.

தமிழகம் கொலை மாநிலமாக மாறி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக ஆட்சியில் கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்?.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழ்நாடு கலை மற்றும் அறிவுசார் மாநிலம். சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலம். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாலேயே இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த அமைதி பூங்காவாக இருக்கிறது. கொலை சம்பவங்களுக்கு அரசை குறை கூற முடியாது. தொடர் தேர்தல் தோல்வியின் விரக்தியில் எடப்பாடி பழனிசாமி இதுபோன்று பேசி வருகிறார்.

ரவுடிகள் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மக்கள் தொகை பெருக்கம் வன்முறை சம்பவங்களுக்கு ஒரு காரணி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்