கட்டப்படாத வீட்டிற்கு நிதி ஒதுக்கி மூதாட்டியிடம் பணமோசடி?

கட்டப்படாத வீட்டிற்கு நிதி ஒதுக்கி மூதாட்டியிடம் பணமோசடி? செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-12-03 19:11 GMT

லாடபுரம் கிராம ஊராட்சி 5-வது வார்டை சேர்ந்த ராமசாமியின் மனைவி சீரங்கம்மாள்(வயது 75). இவருடைய மகன் மணிகண்டன்(43), ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் வீடு கட்டித்தர கோரிக்கை வைக்காத நிலையில், அவரது பெயரில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், சீரங்கம்மாளின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஊராட்சி மன்ற நிர்வாகம், ஊராட்சி பணம் தவறுதலாக வங்கி கணக்கில் ஏறியதாக கூறி, சீரங்கம்மாளிடம் இருந்து அந்த பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படாத வீட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணமோசடி நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மணிகண்டன் கேட்டதற்கு, அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து மணிகண்டன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடமும், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்