லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் தலைநசுங்கி சாவு

லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் தலைநசுங்கி இறந்தார்.

Update: 2022-06-07 18:52 GMT

பெரம்பலூர்:

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசித்து வருபவர் ரெங்கராஜ். இவரது மகன் ஸ்ரீவர்ஷன் (வயது 25). இவர், திருச்சியில் உள்ள ஒரு கட்டுமான பொருட்கள் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகியாக பணிபுரிந்து வந்தார். நேற்று ஸ்ரீவர்ஷன் பணி தொடர்பாக பெரம்பலூர் வந்தார். நேற்று மாலை புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் வழியில் ஒரு இரும்பு கடை அருகே அவர் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த கான்கிரீட் கலவை லாரி, ஸ்ரீவர்ஷன் மீது மோதியது. இதில் ஸ்ரீவர்ஷன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீவர்ஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஸ்ரீவர்ஷனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், டிரைவரின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்