ஓடும் பஸ்சில் மடிக்கணினி திருட்டு
பேரையூர் அருகே ஓடும் பஸ்சில் மடிக்கணினி திருடப்பட்டது.;
பேரையூர்,
தேனி மாவட்டம் பி.கே.பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவர் தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தேனியில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். பஸ் பேரையூர் பஸ் நிலையம் வந்தபோது அவரிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினி திருடு போயிருந்தது. இதுகுறித்து பிரபு பேரையூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மடிக்கணினியை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.