மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடு

மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடு;

Update: 2022-06-06 13:14 GMT

பந்தலூர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, உப்பட்டி, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொளப்பள்ளியில் இருந்து அம்மன்காவு செல்லும் சாலையில் நூலகத்துக்கு முன்பு முத்துலிங்கம் என்பவரது வீட்டின் அருகில மண் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து பக்கத்தில் உள்ள பேபிராணி என்பவரது வீட்டின் மீது மண்சரிவு விழுந்தது. இதனால் அந்த வீடு சேதம் அடைந்தது.

மேலும் தொடர் மண்சரிவால் முத்துலிங்கத்தின் வீடு இடியும் நிலையில், அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் பீதியில் உள்ளனர். எனவே அங்கு மண்சரிவை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டித்தர உடனடியாக நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்