நிலச்சரிவு எதிரொலி: மலைக்கிராமங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள மலைக்கிராமங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-08-02 14:13 GMT

சென்னை,

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே வயநாடு பேரிடர் எதிரொலியாகத் தமிழகத்தில் மலைக் கிராம மாவட்டங்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்