நிலத்தகராறு - இருதரப்புக்கு இடையே மோதல் - ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
மோதலில் காயமடைந்த எட்டு பேர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, நிலத்தகராறு காரணமாக இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், எட்டு பேர் காயமடைந்தனர். ஊரல் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் - ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையே நிலத்துக்கு செல்வதற்கான வழி பிரச்னையில் முன்விரோதம் இருந்து வருகிறது.
இது தொடர்பாக, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரும்பு ராடு, கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், காயமடைந்த எட்டு பேர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், இருதரப்பைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருதரப்பினர் மோதிக் கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.