லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்

திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2022-05-19 14:17 GMT

திண்டிவனம், 

திண்டிவனத்தில் பிரசித்திபெற்ற கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் காலை, மாலை சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றவுடன் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.

நாளை மறுநாள் நடக்கிறது

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை பல்லக்கு வாகனத்திலும், மாலையில் சந்திரபிரபை வாகனத்திலும் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. 23-ந்தேதி (திங்கட்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் வைகாசி திருவிழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்