தியாகராஜர் கோவிலில் லட்சுமி குபேர பூஜை

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் லட்சுமி குபேர பூஜை நடந்தது.

Update: 2022-10-26 18:45 GMT

பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. சப்த விடங்கள் தலங்களில் முதன்மையானது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலின் முதல் பிரகாரத்தில் யோக நிஷ்டையில் மகாலட்சுமி சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி மாதம் அமாவாசை தினத்தில் மகாலட்சுமிக்கு குபேர பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஜப்பசி அமாவாசையையொட்டி மகாலட்சுமிக்கு குபேர பூஜை நடந்தது. முன்னதாக யாகபூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து மகா அபிஷேகத்துடன் குபேர பூஜை நடைபெற்றது.

கந்தசாய் கோவில்

சகல செல்வங்களும், வியாபாரமும் பெருகிட தன்னை வணங்குபவர்களுக்கு லட்சுமி கடாட்சத்தை பெறலாம் என்பது குபேர பூஜையின் சிறப்பாகும். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் தலைமையில் அலுவலர்கள் , பணியாளர்கள் செய்திருந்தனர். இதேபோல, திருவாரூர் வாசன் நகர் கந்தசாய் கோவிலில் மகா லட்சுமிக்கு குபேர பூஜை நடந்தது. லட்சுமி பூஜையில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள், பணம் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்