தூக்கில் பெண் பிணம்

வடுவூர் அருகே தூக்கில் பெண் ஒருவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2022-05-29 14:46 GMT

வடுவூர்:-

வடுவூர் அருகே தூக்கில் பெண் ஒருவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்கில் பெண் பிணம்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் மேல்பாதி வடவாறு சட்ரஸ் அருகே ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக வடுவூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை. அவர் கழுத்தில் சிகப்பு நிற கயிற்றில் ருத்ராட்சம் அணிந்திருந்தார். வலது கை மணிக்கட்டு அருகில் பாபா, முதுகின் மேல் பகுதியில் சூலாயுதம் படங்கள் பச்சை குத்தப்பட்டு இருந்தன.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண் ஒருவர் ஆற்றங்கரை பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்