திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மயங்கி விழுந்த முதியவர் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2023-04-10 18:17 GMT

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மயங்கி விழுந்த முதியவர் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விஷம் குடிக்க முயற்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அங்கு வந்த பெண் ஒருவர் தான் கொண்டு வந்த பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குவளையில் பொடியை போட்டு அழுதபடி கலக்கி குடிக்க முயன்றார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனித்து, விரைந்து சென்று குவளையை அந்த பெண்ணிடம் இருந்து பறித்தனர்.

பின்னர் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த ஜெயசித்ரா என்பதும், தனது மகள் காதல் திருமணம் செய்ய இருப்பதாகவும், 27 வயது மேஜர் என்பதால் போலீசார் மகள் விருப்பப்படி அனுப்பி வைத்து விட்டதாகவும், பதிவுத்திருமணம் செய்து மகளை காதலனுடன் அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார். மேலும் மனஉளைச்சல் ஏற்பட்டதால் விஷம் குடிக்க முயன்றது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த முதியவர்

இதுபோல் தாராபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு புறப்பட்டார். கலெக்டர் அலுவலக நுழைவுவாசல் அருகே நடந்து சென்றவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த முதியவரை மீட்டனர். 108 ஆம்புலன்சை வரவழைத்து அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்