சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்

சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-07-06 19:15 GMT

நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகங்கள் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்க வருகிற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறுதானிய உணவகம்

2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவானது, சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் இது குறித்த விரிவான விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் வருகிற 14-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்