அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-26 18:25 GMT


காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்ககோரி திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததுசிலிண்டருக்கான முழுத்தொகையை பில்லில் உள்ளவாறு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை அரசு வழங்க வேண்டும். உள்ளூர் மற்றும் மாவட்ட பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும்.காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடந்தது.

கோஷம் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் வைத்தியநாதன், சங்க நிர்வாகிகள் திருபுரசுந்தரி, ராஜலட்சுமி, செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாலதி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்