தொழிலாளியின் 2-வது மனைவியை கடப்பாரையால் தாக்கி கொல்ல முயற்சி

தொழிலாளியின் 2-வது மனைவியை கடப்பாரையால் தாக்கி கொல்ல முயன்ற முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-07-01 20:08 GMT

ஓமலூர்:-

ஓமலூர் அருகே உள்ள ஊமகவுண்டம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி செல்வி (40). இந்த நிலையில் சதாசிவம், மீனா (35) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு தாத்தியம்பட்டியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மீனாவை சதாசிவம், ஊமகவுண்டம்பட்டி காட்டூருக்கே அழைத்து வந்துள்ளார். இதனால் செல்விக்கும், மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு செல்விக்கும், மீனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சதாசிவத்தின் முதல் மனைவி செல்வி, மீனாவை கடப்பாரையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இது குறித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்