சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-12-16 17:12 GMT


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கூலி தொழிலாளி

பெரணம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 46), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் பம்பு செட்டில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார்.

அப்போது அங்கு சிறுமியை தேடி அவரது உறவினர்கள் அங்கு வந்தனர். இதைகண்டு அண்ணாதுரை சிறுமியை அங்கேயே விட்டு, விட்டு தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.

10 ஆண்டு சிறை

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி இன்று தீர்ப்பு கூறினார். அ

தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அண்ணாதுரைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தார்.

மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து அண்ணாதுரையை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்