லாரி மோதி தொழிலாளி சாவு

ஒரத்தநாடு அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.;

Update: 2023-09-19 20:41 GMT

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டை அடுத்துள்ள சில்லத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது55).தொழிலாளி. சம்பவத்தன்று பெருமாள் தனது மொபட்டில் வெட்டிக்காடு பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த லாரி பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பெருமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெருமாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்