சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 15 ஆண்டு ஜெயில்; செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 15 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;

Update: 2023-01-24 11:21 GMT

பாலியல் பலாத்காரம்

காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22.10.2015 அன்று 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது சம்பந்தமாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு காஞ்சீபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

15 ஆண்டு ஜெயில்

இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிங்காரவேலனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்