காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2023-04-16 19:29 GMT

ஜீயபுரம்:

ஆற்றில் குளித்தனர்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே உள்ள எலமனூர்பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 40). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

நாகராஜன் தனது குடும்பத்தினருடன் முக்கொம்பு காவிரி ஆற்றுப்பகுதிக்கு குளிக்க சென்றார். ஆற்றில் அவர்கள் குளித்தனர். அப்போது மாலை நேரம் என்பதால் போலீசார் காவிரியில் குளித்தவர்களை எச்சரித்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஆற்றில் குளித்தவர்கள் கரை பகுதிக்கு வந்தனர். அப்போது நாகராஜனை காணவில்லை என்று கூச்சலிட்டனர்.

பிணமாக மீட்பு

இதையடுத்து போலீசார், அந்த பகுதியில் வேலை செய்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியோடு காவிரி ஆற்றில் நாகராஜனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் தேடிய நிலையில், இரண்டாவது மதகு பகுதியில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்த நாகராஜனை பிணமாக மீட்டனர்.

இதையடுத்து அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாகராஜனின் மனைவி ரம்யா கொடுத்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்