பொன்னேரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சாவு

பொன்னேரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சிசிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-04-21 14:47 IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் அடங்கிய பாப்பன்குப்பன் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சய்யா (வயது 42). கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னால் பொன்னேரி அடுத்த புலிக்குளம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு மனைவி, மகனுடன் வந்தார்.

அங்கு தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்த செஞ்சய்யா தனியாருக்கு சொந்தமான புளியம் மரத்தில் ஏறி புளி பறித்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார்.

இதில் செஞ்சய்யா பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிசிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் செஞ்சய்யா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் புலிக்குளம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்