முதியவரை மிரட்டிய தொழிலாளி கைது
நெல்லை பேட்டை அருகே முதியவரை மிரட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
பேட்டை:
நெல்லை பேட்டையை அடுத்த நரசிங்கநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 65). இவருக்கு சொந்தமான வயலில் அதே பகுதியை மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான மாடு மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை சண்முகசுந்தரம், மாரியப்பனிடம் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் மாரியப்பன், சண்முகசுந்தரத்தை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தார்.