கே.வி.குப்பம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கே.வி.குப்பம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கே.வி.குப்பம் பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் தேவன், ஒன்றிய இணை செயலாளர் தீபாசுதாகர், துணை செயலாளர் குப்புசாமி, விவசாய பிரிவு மேற்கு ஒன்றிய செயலாளர் மணவாளன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பகதூர்சிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஆர்.செந்தில்குமார் வரவேற்றார்.
தமிழக அரசின் சொத்துவரி, பால்விலை, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிளை நிறைவேற்றாததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சுரேஷ், வேங்கையன், ஊராட்சி மன்ற தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வடுகந்தாங்கல் ஆரம்பசுகாதார நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜி.லோகநாதன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் கோபி, ஒன்றிய அவைத் தலைவர் எல்.பி.பாபு, துணை செயலாளர் பொன்முடி, மாணவரணி தினேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் சொத்துவரி, பால்விலை, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.