வரசக்தி விநாயகர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

வரசக்தி விநாயகர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.;

Update:2023-02-05 00:47 IST

ஆலங்குடி அருகே ஆயிப்பட்டி வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் செம்முனீஸ்வரர் பெரிய கருப்பர், பத்ரகாளியம்மன் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளன. இந்த கோவிலில் வருடாபிஷேகம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்