மாதவராகியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
மாதவராகியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.;
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டியை அடுத்த புலவன்பட்டி குளக்கரையில் மாதவராகியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குத்துவிளக்கு பூஜை இன்று நடந்தது. இந்த பூஜையில் 1008 பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து பெண்கள் குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.